Wednesday, October 23, 2019
Tuesday, October 15, 2019
மனித தெய்வம் டாக்டர் அப்துல்கலாம் எடுத்த
11 அவதாரங்கள்!
1. மனிதகுலத்தின்மேல் பேரன்பு காட்டி, சீராட்டை வளர்த்த தெய்வத்தாய்!
2. நாட்டு மக்களுக்கு இறுதிமூச்சுவரை தன்
கடமைகளைச் செய்த,
கடமை தவறாத தந்தை!
3. இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு அடிப்படை தேவை கல்விதான் என்பதை உணர்ந்து, பறந்து பறந்து பாடம் புகட்டிய நிலையிலேயே, இன்னுயிர்
நீத்த ஆசான்!
4. நாட்டு மக்களின்
உயிர்காக்கப் போராடும் முப்படைகளின் வீரத்தளபதி!
5. நாட்டு - உலக முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான அறிவியல் முன்னேறத்திற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த விஞ்ஞானி!
6. ஏழை, எளிய,
நடுத்தர மக்களின் நலனுக்காக அரும்பாடுபட்ட தர்மசிந்தனையாளன்!
7. நோய்வாய்ப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்
நலம்பேண அரிய மருத்துவக் கண்டுபிடிப்புகளைத் தந்த
மருத்துவர்!
8. கடின உழைப்புதான் முன்னேற்றத்திற்கு ஒரே வழி என்பதை உலகுக்கு உணர்த்திய உன்னத உழைப்பாளி!
9. இந்தியாவை 2020ல் வல்லரசாக்கியே தீருவேன் என்று ஒவ்வொரு இந்தியனையும் சபதமேற்கத் தூண்டிய போராளி!
10. அரசியல் கொள்கைகள், வேறுபாடுகள்,
எழை
- பணக்காரன், படித்தவர் - படிக்காதவர் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், இறுதிமூச்சு
வரை பறந்து பறந்து மக்களிடையே தன் உன்னத கருத்துக்களைப் பரப்பிய சுதந்திரப் பறவை!
11. 50 ஆண்டுகளாகியும் பலரால் சாதிக்க
முடியாததை, 3 ஆண்டுகள் பதவிக்காலத்தில் சாதித்துக்காட்டிய,
இந்திய மக்கள் அனைவரையும் இலட்சியக்கனவு காணவைத்த சாதனையாளன்!
Sunday, October 6, 2019
Sunday, July 17, 2016
Monday, June 27, 2016
தாழம்பூ ஆசிரியருக்குக் கிடைத்துள்ள விருதுகளும், பாராட்டுக்களும்
1999
- 2001 : 'தாழம்பூ' இதழை, சிறந்த கையெழுத்து இதழாகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியது, கன்னியாகுமரி 'உதய தாரகை' தமிழ்க் கழகம்.
2000 : கோவை தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம், 'தாழம்பூ' ஆசிரியரை சிறந்த சிற்றிதழ் ஆசிரியராகத் தேர்வுசெய்து விருது வழங்கியது.
2005 : வேலூர் சோலையார்ப் பேட்டை பெரியார் - காமராசர் பேரவை, 'தாழம்பூ' ஆசிரியருக்கு 'மனிதநேய முரசு' என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது.
2010
(ஜனவரி 3): விருதுநகர், கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஐந்தாம் ஆண்டுவிழாவில் 'தாழம்பூ' இதழை அறிமுகம் செய்து, கௌரவித்தது.
2011
(பிப். 26) : செனை மேலக்கரண்டை மகாகவி பாரதி நற்பணி மன்றம் 'தாழம்பூ' ஆசிரியருக்கு 'சிற்றிதழ் மாமணி' என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.
2011
(ஏப். 30) : நாகை மாவட்டம், திருக்குவளை பத்மா - வெற்றிப்பேரொளி இலக்கிய அறக்கட்டளை ஆசிரியரின் இதழ்ப் பணியைப் பாராட்டி, ரூ. 1000 பரிசுடன், ' சிற்றிதழ்ப் போராளி' என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.
2012
(மே. 6) : சென்னை, வாசல் வசந்தப் பிரியன் அவர்களின் 'வாசல் கவிதை அமைப்பு' நிகழ்த்திய கவியரங்கில் ஆசிரியரைச் சிறப்பு விருந்தினராகக் கௌரவித்தது.
2012
(அக். 14) : சென்னை, சைதை மகாத்மா காந்தி நூல் நிலையம், 'தாழம்பூ' ஆசிரியருக்கு 'சக்தி டி.கே. கிருஷ்ணசாமி விருது' வழங்கி கௌரவித்தது.
2012
(அக். 20) : அறந்தாங்கி, த.மு.ச.க.ச. நகரக் கிளை ஆசிரியரைப் பராட்டி நினைவுப் பரிசு வழங்கியது.
2013
(ஜன. 27) : நாகை மாவட்டம், குத்தாலம், முத்தமிழ் அறிவியல் மன்றம், ஆசிரியருக்கு 'இதழியல் இனியர்' என்ர விருதினை வழங்கி, நீண்ட வாழ்த்துக் கவிதை வாசித்து கௌரவித்தது.
2013
(பிப். 16) : சென்னை, 'கண்ணியம்" இதழ், "இதழியல் செம்மல்' என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.
2013
(மே. 25) : சென்னை, 'வண்ணப்பூங்கா வாசன்' அவர்களின் 67 ஆவ பிறந்தநாள் விழாவில். ஆசிரியருக்கு ' சிற்றிதழ் நற்பணியாளர்' என்ற விருதினை வழங்கி கௌரவித்தது.
2013
(ஜூலை 21) : கடலூர் மாவட்டம், பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம், 'செந்தமிழ்ச் சிற்றிதழ்ச் செம்மல்' என்ற விருதினை வழங்கிக் கௌரவித்தது.
2013
(டிசம்.22) : புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தலைவர் திரு. முத்து சீனிவாசன் அவர்கள் 'சிற்றிதழ்ச் செல்வர்' என்ற விருதினை வழங்கி கௌரவித்தார். தாழம்பூ ஆசிரியர் எழுதிய ' சாதனையாளர்களுடன் ஓர் சந்திப்பு' நூலை வெளியிட்டுப் பெருமை சேர்த்தார்.
2014
(நவம்.15) : நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்திலிருந்து வெளிவரும் 'செங்கதிர்' இதழின் ஆசிரியர் மா. தனசேகரன், 'வீரமா முனிவர்' என்ற விருதிபை வழங்கிச் சிறப்பித்தார்.
2014
(டிசம்.17) : தஞ்சாவூர் இலட்சுமி சந்திரசேகரன் அறக்கட்டளை, தாழம்பூ வளர்ச்சி நிதிக்காக, ரூ. 2000/- நன்கொடை அளித்துச் சி2015
(மார்ச். 15) : சென்னை, தாம்பரம் தமிழ்நாடு பத்திரிகை தொடர்பாளர்கள் நலச் சங்கம், ஆசிரியருக்கு ' கவிமாமணி' விருது வழங்கியது.
2015
(மே.31) : சென்னை, தாம்பரம் 'சிறு பத்திரிகைகள் சங்கம்' 'திருவள்ளுவர் விருது' வழங்கிச் சிறப்பித்தது.
2015
(அக்.25) : வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நிகழ்ந்த தமிழ்ச் சிறு பத்திரிகையளர்கள் சங்க 4வது பொதுக்குழுக் கூட்டத்தில் 'புரட்சிக் கவிஞர் பாரதிதசன் நினைவு விருது' வழங்கிச் சிறப்பித்தனர்.
2015
(டிச.26) : சிவகாசியில் நிகழ்ந்த 24 வது சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில், 'விடியலை நோக்கி' ஆசிரியர் வீர. மணிகண்டன், தருமபுரி தகரோன் தமிழ் அறக்கட்டளை மற்றும் சேலம் நியூ வள்ளலார் நற்பணி அறக்கட்டளை இணைந்து, 'எழுத்துச் சிற்பி' என்னும் விருதினை வழங்கிச் சிறப்பித்தனர். இவ்விருதை பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் வழங்கினார்.
========================================================================
தொகுப்பு: கிரிஜா மணாளன்
Subscribe to:
Posts (Atom)