
ஆற்றங்கரைத் "தாழம்பூ"வைக் கற்றாய்ந்தார் அரங்கில் மணம் விரிக்கச்செய்திடும் திரு. எம்.எஸ்.கோவிந்தராஜன் அவர்களுக்கு வாழ்த்தும், வணக்கமும்.
தாழம்பூவை என் நெஞ்செல்லாம் மடல் விரித்திடவும், மறக்கவொண்ணா என் நெகிழ்ச்சியில் நெய்திடவும் செயல்புரியும் தங்கள் இலக்கிய வேள்விக்கு என் அணிலே ஆகுதி. நான் என்றோ எழுதியதை, தேனீயைப்போலச் சேகரித்து, தாழம்பூவில் வழங்கியிருக்கிறீர்கள். அதைப் படித்துவிட்டு, மதுரை கவிதாயினி மஞ்சுளா என்னுடன் ஒருமணி நேரம் தொலைபேசியில் பேசினார். "போராடி வெல்லத் தூண்டும் சக்தி'யாக இருப்பதாய்ச் சொன்னார்.
இதழ் முழுவதும் படித்தேன். எல்லோருக்கும் உதவிக்கரமும், இடமும் தரும் நீங்கள், சில சமயம் உங்கள் முகவரியைக்கூட இதழில் போடவில்லை. போடவேண்டும். காற்றுக்கும் முகவரி வேண்டிய காலமிது. உங்கள் காற்றுச் சேவைக்குப் பாராட்டுக்கள்.
- கலைமாமணி டாக்டர் வாசவன்
தலைவர், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
சென்னை 600035.