Saturday, November 8, 2008

"தாழம்பூ" நவம்பர் 2008 இதழ்!


தனது இதழுலகப் பயணத்தில் 305வது இதழாக மலர்ந்திருக்கும் "நவம்பர்-2008" இதழ்!
அமரர் வல்லிக்கண்ணன் அவர்களின் எழுத்துலக வெற்றிகளை நினைவுகூர்ந்து ஆசிரியர் எம்.எஸ். கோவிந்தராஜன் எழுதியுள்ள "வாழும் தமிழ் வல்லிக்கண்ணன்" சிறப்புக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மற்றும், இந்தியாவின் முதல் பெண் புனிதராக போப் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அல்போன்ஷா பற்றிய கட்டுரை, இந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்றுள்ள அரவிந்த் அடிகாசென் (சென்னையில் பிறந்து, கர்நாடகாவில் வளர்ந்து, ஆஸ்திரேலியாவில் படித்து, தற்போது மும்பையில் வசிப்பவர்) பற்றிய கட்டுரை, நூல் அறிமுகம், வாசகர் கடிதங்கள், கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

Thursday, November 6, 2008

சிறப்புப் பெயர்!


மிக்க மதிப்பும்
மிகுந்த மரியாதையும்
தக்க பெயர்ச் சிறப்பும்
தந்து வைத்தோம் பலருக்கு....
முன்னாள் குடியரசுத் தலைவர்
முன்னாள் அமைச்சர்
முன்னாள் ஆளுநர்
முன்னாள் நீதியரசர்
முன்னாள் இராணுவத்தினர்...
ஏன்? குற்றவாளிகூட,
முன்னாள் குற்றவாளி! - ஆனால்,
"முன்னால் சுமங்கலி"க்கு மட்டும்
சிறப்புப் பெயர் தந்தோம்
"விதவை" என்று!

- 'முத்தமிழ்த் தென்றல்' காற்று
கோவை - 641 012.

Saturday, November 1, 2008


உன் அழகில்
கண்பட்டுவிடக் கூடாதேயென
திருஷ்டிப்பொட்டு வைக்கிறாய்...
என்ன செய்ய,
உனக்குத் திருஷ்டிப்பொட்டும்
அழகாகிவிடுகிறது!

- ஏ. சரவணராஜ் (9943332116)
கோவை, தமிழ்நாடு.